Saturday, January 30, 2021

இலவம் பஞ்சு - ஒரு அறிமுகம்

இலவம் பஞ்சு என்பது இலவ மரத்தில் இருக்கும் இலவங்காயில் இருந்து கிடைக்கும் ஒரு நார் பொருள். இலவம் பஞ்சின் மினுமினுப்புனாலும் அதன் கவர்ச்சிகர தோற்றத்தினாலும் அதனை பட்டுப் பஞ்சு” என்றும் அழைப்பர். இன்றும் இலவம் பஞ்சுக்கும் பருத்தி பஞ்சுக்கும் அதீத வித்தியாசங்கள் உண்டு என அறிந்தவர் சிலரே.

தன்மைகள்

மிக சுத்தமான தரமான இலவம் பஞ்சானது வெள்ளை நிறத்தில் மினுமினுப்புடன் காணப்படும். மென்மை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் போதெல்லாம் "பஞ்சைப் போல" எனக் கூறும் அளவுக்கு மென்மைத் தன்மை கொண்டது இலவம் பஞ்சு. இலவம் பஞ்சுக்கு நீர் உறிஞ்சும் தன்மை இல்லை. தனது எடையை விட 30 மடங்கு எடையை தாங்கும் தன்மை கொண்டது இலவம் பஞ்சு. எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை உடையது.

பயன்கள்

இலவம் பஞ்சுகள் மென்மையானதாகவும் உறுதியற்றும் இருப்பதால் நூல் நூற்கப் பயன்படுவதில்லை.  இது மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறை போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

இலவம் பஞ்சு - ஒரு அறிமுகம் இலவம் பஞ்சு என்பது இலவ மரத்தில் இருக்கும் இலவங்காயில் இருந்து கிடைக்கும் ஒரு நார் பொருள் . இலவம் ப...